உணவகங்களில் சாப்பிடுதல், கடைகளுக்கு செல்லுதல் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் - ஹார்வார்ட் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

0 3132
உணவகங்களில் சாப்பிடுதல், கடைகளுக்கு செல்லுதல் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகம் - ஹார்வார்ட் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

உணவகங்களில்  சாப்பிடுவதாலும், ஷாப்பிங் செல்வதாலும், விமானப்பயணத்தால் ஏற்படுவதை விட அதிகமாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என ஹார்வார்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானப்பயண பொது சுகாதாரம் குறித்த நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு பயணிகள் ஊக்குவிக்கப்பட்டால், விமானப் பயணம் வாயிலான கொரோனா தொற்றை வெகுவாக குறைக்கலாம் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் முழுமைக்கும் முகக்கவசங்களை அணிவதுடன், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில்  தொடர்ச்சியான காற்றோட்ட வசதி அளிக்கப்படுவதால் தொற்று பரவல் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments