அதிபர் தேர்தலை ஒட்டி அமெரிக்காவில் பொது அமைதி குலைய வாய்ப்பு: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை

0 1432
அதிபர் தேர்தலை ஒட்டி அமெரிக்காவில் பொது அமைதி குலைய வாய்ப்பு: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் எச்சரிக்கை

அதிபர் தேர்தலை ஒட்டி அமெரிக்காவில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது என ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க்  எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஒரு சோதனை காலமாக இருக்கும் என கூறியுள்ள அவர், அதிபர் தேர்தலை முன்னிட்டு ஃபேஸ்புக்கில் வெளியாக வாய்ப்புள்ள தவறான தகவல்களையும், மோசடிகளையும் தடுப்பது குறித்த தமது கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் இறுதியாவதற்கு பல நாட்கள் பிடிக்கும் என்பதாலும், தேர்தலை ஒட்டி மக்களிடம் பலதரப்பட்ட கருத்துக்கள் உருவாகும் என்பதாலும், பொது சமூகத்தில் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதுவதாக மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments