சீனாவுடனான எல்லைத் தகராறில் இந்தியா எந்த வகையிலும் தயங்கக் கூடாது - அமெரிக்கா
எல்லைத் தகராறு விவகாரத்தில் எந்த வகையில் தயக்கம் காட்டினாலும் அது சீனாவை அடக்குவதற்கான முயற்சிகளுக்கு கேடு விளைவிக்கும் என இந்தியாவிடம் அமெரிக்கா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் இந்தியா வந்து, டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும் ஜெய்சங்கரிடம் எல்லை தகராறு விவகாரத்தில் தங்களது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
சீனாவுடனான மோதலை உலகமே உற்றுக் கவனித்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் இந்திய தரப்பில் எந்த வகையில் தயக்கம் காட்டினாலும், சீனாவின் விரிவாதிக்க கொள்கையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று அமெரிக்க அமைச்சர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments