பிரான்ஸ் சர்ச்சில் நடந்த கொலைகளை வரவேற்று மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது டுவிட்...வெடிக்கும் சர்ச்சை
பிரெஞ்சு நகரமான நைசில் உள்ள கிறித்தவ ஆலயம் ஒன்றில்,தீவிரவாதி என கருதப்படும் நபர், பெண் ஒருவரை தலையை வெட்டியும், மேலும் இரண்டு பேரை கொன்றதையும் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது வரவேற்றிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டுவிட் ஒன்றில், பிரான்ஸ் மக்களை தண்டிக்கும் உரிமை முஸ்லீம்களுக்கு உண்டு என அவர் பதிவு செய்தார்.
பிரான்ஸ் அரசு, மற்ற மத த்தினரின் உணர்வுகளை மதிக்குமாறு தனது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் டுவிட் செய்தார். இதற்கு பலத்த கண்டனம் எழுந்த நிலையில், அந்த பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.
Comments