எத்தனால் விலை உயர்வு... இனியாவது கரும்பு விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா?

0 3033
கரும்பு விவசாயிகள்

ந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட அரசு எண்ணெய் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் எத்தனால் விலையை, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு திருத்தியமைத்துள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள் பயன் அடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு சர்க்கரையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எத்தனால் விலையை லிட்டருக்கு 59.48 ரூபாயிலிருந்து 62.25 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது. மேலும், ‘சி’ ஹெவி மொலாசிஸ் இலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால் லிட்டருக்கு ரூ.1.94 ம், ’பி’ ஹெவி மொலாசிஸ் இலிருந்து  தயாரிக்கப்படும் எத்தனால் ரூ.3.34 ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ”எத்தனாலின் ஜிஎஸ்டி மற்றும் போக்குவரத்து செலவுகள் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் ஏற்கப்படும்” என்று தெரிவித்தார்.

2013 - 2014 ம் ஆண்டில் 38 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே வாங்கப்பட்ட நிலையில்,  2019 - 2020 ம் ஆண்டில் மட்டும்195 கோடி லிட்டர் எத்தனால் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் எத்தனாலின் தேவை அதிகரித்து வருகிறது...  

”எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் எத்தனால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறையும்” என்று மத்திய அரசின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எத்தனால், சுற்றுச்சூழல் சார்புடைய எரிபொருளாகும். புதைபடிம எரிபொருள்களான பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களுடன் எத்தனால் கலந்து பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் மாசு வெகுவாகக் குறையும். தற்போது பெட்ரோலுடன் 10 சதவிகித எத்தனால் கலந்து விற்கப்படுகிறது. இதனால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யையும் மிச்சப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments