முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் 58 வது குருபூஜை விழா: முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவரின் 113ஆவது ஜெயந்தி விழா மற்றும் 58ஆவது குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முத்துராமலிங்க தேவரின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மதுரையிலிருந்து பசும்பொன் வந்த மு.க. ஸ்டாலின், அங்குள்ள தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Comments