நாடு முழுவதும் 700 அணைகளை வலுப்படுத்த 10,211 கோடி ரூபாய்.. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

0 1696
நாடு முழுவதும் 700 அணைகளை வலுப்படுத்த 10,211 கோடி ரூபாய்.. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

நாடு முழுவதும் 700 அணைகளை பராமரிப்பதற்காக 10 ஆயிரத்து 211 கோடி ரூபாயை ஒதுக்க, பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த, ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் இதனை தெரிவித்தார். குறிப்பிட்ட அணைகளில் 80 சதவிகிதத்திற்கும் மேலானவை, 25 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனவும், அவற்றை பராமாரிக்க அறிவியல் ரீதியான கண்காணிப்பு அவசியம் எனவும் அமைச்சர் கூறினர்.

10 ஆண்டுகால திட்டத்திற்கான இந்த நிதி, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து பெறப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments