வெளிநாட்டுப் பணியாளர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதற்கான ‘ஹெச்-1பி’ வகை விசா வழங்கும் முறையில் மாற்றம் செய்ய முடிவு
வெளிநாட்டுப் பணியாளர்களை அனுமதிப்பதற்கான ‘ஹெச்-1பி’ வகை விசாவினை கணினி மூலம் குலுக்கல் முறையில் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், விண்ணப்பதாரர்கள் பெறும் வருடாந்திர ஊதியத்தின் அடிப்படையில் அவர்களுக்கு விசா வழங்கும் முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் விண்ணப்பதாரர்கள், ஹெச்-1பி பணியாளர்கள், அமெரிக்கப் பணியாளர்கள் ஆகிய 3 தரப்பினரின் நலன்களையும் சமன் செய்யும் வகையில் முன்னுரிமைகள் அளிக்கப்படும்.
இந்த நடைமுறை மாற்றம் குறித்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இன்னும் 30 நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Comments