இந்திய ராணுவத்தில் தகவல் பரிமாற்றத்திற்காக புதிய செயலி
தகவல் பரிமாற்றத்திற்காக பாதுகாப்பு படை வீரர்களுக்கு என, இந்திய ராணுவம் பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாய் எனப்படும் இந்த செயலியின் மூலம் இணைய சேவையுடன் பாதுகாப்பான முறையில், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்களுடன், குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப், பேஸ்புக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டு தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், ராணுவத்தில் குறிப்பிட்ட செயலிகளை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.
Comments