வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு ஆலோசனை

0 1604
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

ஜனவரி 20-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும், நவம்பர் 16-ம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படவுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் வழக்கமாக நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டம் நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, இரட்டை பதிவுகளை நீக்குவது, வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments