சென்னை மாநகர காவல்துறை சார்பாக 10 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைப்பு

0 1503
சென்னை மாநகர காவல்துறை சார்பாக 10 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவசர கால தேவைக்காக, சென்னை காவல்துறையில் 10 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழையால், பல இடங்களில், தண்ணீர் தேங்கி, வெள்ளக்காடானது. இதனை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து காவல்துறையினரும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை காவல்துறையில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்காக 10 குழுக்களை அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் பேரிடர் காலங்களில் பணிபுரிந்த அனுபவம் மிக்க காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 10 குழுக்களுக்கு, பேரிடர் மீட்பு பணிக்குத்தேவையான உபகரணங்களை, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments