அமெரிக்காவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26-ம் தேதி கத்தியுடன் சுற்றி திரிந்ததாக வால்டர் வாலஸ் என்ற கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
வால்டர் வாலஸ், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும்நிலையில், அவரது மரணத்துக்கு நீதி கோரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் வன்முறை வெடித்ததையடுத்து பல்வேறு கடைகள் சூறையாடப்பட்டன.
Comments