ஈரோட்டில் நந்தா கல்வி நிறுவனங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை வருமான வரித்துறையினர் சோதனை

0 12614
ஈரோட்டில் நந்தா கல்வி நிறுவனங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை வருமான வரித்துறையினர் சோதனை

ஈரோட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நந்தா கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற, வருமான வரித்துறையினர் சோதனை நள்ளிரவு ஒரு மணி வரையில் நீண்டது.

உரிமையாளர் சண்முகம் சில ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சண்முகத்தின் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அவருக்கு சொந்தமான வீடுகள், பண்ணை வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

சண்முகம் மற்றும் அவரது இரண்டு மகன்களிடமும் நள்ளிரவு வரை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments