தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை... 7 லட்சம் ரூபாய் பறிமுதல்

0 2036
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை... 7 லட்சம் ரூபாய் பறிமுதல்

மதுரை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு நடைபெறுவதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த சோதனைக்குப் பின் பதிவாளர் பாலமுருகன் அறையில் இருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 46 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது.

 

விழுப்புரம் மாவட்டம் வானூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பத்திரப்பதிவு நடப்பதாக புகார் வந்ததை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பிடிபட்டுள்ளது.

 

உதகை மின்வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் 2 லட்சம் ரூபாயும், பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகம், நெல்லிக்குப்பம் சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஒரு லட்சம் ரூபாயும் பிடிபட்டுள்ளது. தீபாவளி நெருங்குவதால் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments