இறுதிக்கட்டத்தை எட்டியது அமெரிக்க அதிபர் தேர்தல்: சொந்த ஊரில் வாக்களித்தார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தமது மனைவி ஜில் பைடனுடன் சொந்த ஊரான வில்மிங்டனில் தமது வாக்கைப் பதிவு செய்தார்.
கொரோனா விவகாரத்தை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் டிரம்ப் யதார்த்தமான நிலவரம் குறித்தோ அறிவியல் பூர்வமான முடிவுகள் குறித்தோ கவலைப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
கடந்த சனிக்கிழமையன்ற புளோரிடாவில் டிரம்ப் வாக்களித்தார். நேற்று ஆரிசோனாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலுக்கு மேலும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இரு அதிபர் வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
We voted. pic.twitter.com/LjaPBB69wC
— Joe Biden (@JoeBiden) October 28, 2020
Comments