இ சஞ்சீவனி திட்டத்தின் கீழ் இதுவரை 6 லட்சம் ஆலோசனைகள் - மத்திய அரசு
சாதாரண நோய்களுக்கு வீட்டில் இருந்தே இணையதளம் அல்லது செல்பேசி மூலம் இலவசமாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் இ சஞ்சீவனி திட்டத்தின் கீழ் இதுவரை 6 லட்சம் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், கடந்த ஏப்ரல் மாதம் செயல்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் தினசரி 12 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் இ சஞ்சீவனி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
கடந்த 6 மாதங்களில் 6 லட்சம் ஆலோசனைகளும், 15 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் ஆலோசனைகளும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூலம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments