இந்தியா-மத்திய ஆசிய நாடுகளின் இரண்டாவது மாநாடு : வெளியுறத்துறை அமைச்சர்கள் காணொலி முறையில் பேச்சுவார்த்தை
இந்தியா - மத்திய ஆசிய நாடுகளின், 2ஆவது மாநாடு இன்று நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, காணொலி முறை மூலம் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
இதேபோன்று, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின், வெளியுறவுத்துறைச் அமைச்சர்களும், கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், பங்கேற்றனர்.
இதில், அந்தந்த நாடுகளின் அரசியல் நிலவரம், பாதுகாப்பு, பொருளாதார, கலாச்சாரம் தொடர்பாக பேசியதோடு, சர்வதேச பிரச்சினைகள் குறித்தும், பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments