அமெரிக்காவிடம் இருந்து நீண்டதூரம் செல்லும் நவீன டிரோன்களை இந்தியா வாங்க வாய்ப்பு

0 2204
அமெரிக்காவிடம் இருந்து நீண்டதூரம் செல்லும் நவீன டிரோன்களை இந்தியா வாங்க வாய்ப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்து கொண்ட COMCOSA ஒப்பந்தம் நேற்று செய்து கொண்ட BEAC ஒப்பந்தத்தின் அடிப்படையில், அமெரிக்காவிடம் இருந்து, நீண்ட தூரம் செல்லும் ஆயுதம்தாங்கி டிரோன்களை வாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

மிகவும்உயரமாக பறந்து நிலத்திலும், கடலிலும் எதிரி இலக்குகளை தாக்க உதவும் ரீப்பர்ஸ், பிரிடேட்டர்ஸ் (Reapers and Predators) போன்ற டிரோன்களை வாங்க இந்த ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.

முப்பது MQ9 ரக ஆயுதம்தாங்கி ரீப்பர் டிரோன்களை வாங்க ராணுவம் திட்டமிட்டாலும் அதற்கு சுமார் 22 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவாகும் என கூறப்படுகிறது.

சீனாவுடன் பதற்றம் நீடிக்கும் நிலையில் குறைந்தது 6 டிரோன்களையாவது விரைவாக வாங்க வேண்டும் என ராணுவம் விருப்பம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments