நாட்டில் அதிக மது அருந்தும் பெண்களின் பட்டியலில் அசாம் பெண்கள் முதலிடம்
நாட்டில் பெண்களில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் அசாம் மாநில பெண்கள் முதலிடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சக ஆய்வு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2015-16ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அடிப்படையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, அசாம் மாநிலத்தில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட 26 புள்ளி 3 சதவீத பெண்கள் மருந்து அருந்துகின்றனர்.
10 ஆண்டுகளில் அசாமில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், திரிபுரா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
Comments