திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு.!
நாட்டில், முன்கூட்டியே திட்டமிடப்படட் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை, நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து, சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் அறிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா ஊரடங்கு, அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கான தடையும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறிப்பிட்ட நாடுகளுக்கான அனுமதிக்கப்பட்ட சர்வதேச வழித்தடங்களில் மட்டும், பயணிகள் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என, சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் கூறியுள்ளது.
— DGCA (@DGCAIndia) October 28, 2020
Comments