சிகிச்சை பெற்று வரும் அமைச்சருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- அதிமுக பிரமுகரால் பரபரப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அதிமுக பிரமுகர் ஒருவரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வெளியிட்டுள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த தால் சரவணன் (Dal Saravanan) என்ற அந்த நபர், தனது முகநூல் பக்கத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டிருந்தார். சில மணி நேரங்களில் அந்த போஸ்டர் நீக்கப்பட்டது.
தெரியாமல் தவறுதலாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்டு விட்டதாகவும் பின்னர் உடனடியாக அதனை நீக்கி விட்டதாகவும் தால் சரவணன் தெரிவித்தார்.
சிகிச்சை பெற்று வரும் அமைச்சருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- அதிமுக பிரமுகரால் பரபரப்பு #MinisterDoraikkannu | #Covid19 https://t.co/CXKWJBKCu1
— Polimer News (@polimernews) October 28, 2020
Comments