ரூ. 5 மதிப்புள்ள வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக சிறுவர்களுக்கு ரூ. 700க்கு விற்ற மருந்தக உரிமையாளர்

0 13748
ரூ. 5 மதிப்புள்ள வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக சிறுவர்களுக்கு ரூ. 700க்கு விற்ற மருந்தக உரிமையாளர்

சென்னையில் 5 ரூபாய் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக சிறுவர்களிடம் 700 ரூபாய்க்கு விற்ற மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளான்.

கொடுங்கையூரில் போதையில் சுற்றித் திரிந்த சிறுவன் ஒருவனைப் பிடித்து போலீசார் விசாரித்தபோது, அவன் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டிருப்பது தெரியவந்தது.

முத்தமிழ் நகரிலுள்ள பிரண்ட்ஸ் மெடிக்கலில் அந்த மாத்திரைகளை வாங்கியிருப்பதை கண்டுபிடித்த போலீசார், சிறுவனிடமே பணத்தைக் கொடுத்து மாத்திரைகள் வாங்கி வருமாறு அனுப்பினர். மெடிக்கல் உரிமையாளர் மோகன் சிறுவனுக்கு மாத்திரைகளை கொடுத்தபோது மறைந்திருந்து அவனை கைது செய்தனர்.

5 ரூபாய் மதிப்பு கொண்ட வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக 700 ரூபாய்க்கு மோகன் விற்று வந்ததை கண்டுபிடித்த போலீசார், அவனிடமிருந்து 170 வது வலி நிவாரணி மாத்திரைகளையும் 25 க்கும் மேற்பட்ட வலி நிவாரணி மருந்துகளையும் கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments