பிறந்த குழந்தையின் தாயை தேட, பெண் பயணிகளிடம் அத்துமீறி உடல் பரிசோதனை: வருத்தம் தெரிவித்தது கத்தார் அரசு
கத்தார் தலைநகர் தோகா விமான நிலையத்தில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடும் பொருட்டு, பெண் பயணிகளிடம் அத்துமீறி உடல் பரிசோதனை நடத்தியதற்கு அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
கடந்த 2ம் தேதி தோஹா விமான நிலைய கழிவறையில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் இருந்து பெண் பயணிகளை இறக்கி, அவர்களில் யாருக்கேனும் அன்று குழந்தை பிறந்ததா என உடல் பரிசோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், கத்தார் பிரதமர் ஷேக் காலித் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Comments