இந்தியாவுக்கும் தங்களுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட முடியாது- சீனா
இந்தியாவுக்கும் தங்களுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனையில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, லடாக் பிரச்சனையை பற்றி குறிப்பிடும் போது, இந்தியா தனது இறையாண்மையயும், சுதந்திரத்தையும் காக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கா உறுதியான ஆதரவை அளிக்கும் என்றார்.
இது குறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவும், சீனாவும், எல்லைப்பிரச்சனையை ராஜீய, ராணுவ பேச்சுவார்த்தைகள் வாயிலாக தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து வேற்றுமைகளை சரிசெய்யும் திறனும், அறிவும் இரண்டு நாடுகளுக்கும் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments