ஆஸ்திரேலியாவில் ஈபிள் கோபுரத்தை விட மிகவும் உயரமான பவளப்பாறை கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவில் உள்ள பவளப்பாறை ஒன்று ஈபிள் கோபுரத்தை விட உயரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மேனியா தீவுக்கு அருகே உள்ள கிரேட் பேரியர் ரீஃப் எனப்படும் உலகின் மிகவும் பெரிய பவளப்பாறைத் திட்டுக்கள் குறித்து அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, பவளப்பாறைகளில் ஒன்று ஆயிரத்து 640 அடி உயரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடலுக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும் இந்தப் பவளப்பாறை பாரிசின் ஈபிள் கோபுரம், கோலாலம்பூரின் பெட்ரோனாஸ் கோபுரம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் ஆகியவற்றை விட உயரமானது என்பது தெரியவந்துள்ளது.
Comments