மும்பை பைகுல்லா சந்தையில் இரட்டிப்பு விலைக்கு வெங்காயம் விற்பனை
வெங்காய விலை தொடர்ந்து அதிகமாகவே நீடிக்கிறது. மும்பையின் பைகுல்லா சந்தையில் இரட்டிப்பு விலையில் வெங்காயம் விற்கப்படுகிறது.
விலை ஏற்றத்தால் ஒரு நாளைக்கு பத்து குவிண்டால் விற்கப்பட்ட வெங்காய மூட்டைகள் தற்போது 3 குவிண்டால் மட்டுமே விற்பனையாகின்றன என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே உருளைக்கிழங்கு விலையும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உருளைக்கிழங்கு கிலோ 50 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகின்றது. தினமும் 100 லாரிகள் வரக்கூடிய நிலையில் வரத்து குறைந்ததால் 50 லாரிகள் மட்டுமே வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Comments