போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்
போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க, மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த இருக்கிறது.
எந்த வித தொழிலும் செய்யாமல் போலியான விலைப்பட்டியல் ரசீது மூலம் கணக்கு காட்டி ஜிஎஸ்டி ரீபண்ட் பெற்று மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.
அதனை தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஆதார் பதிவு முறையை பயன்படுத்த இருப்பதாக மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய நிறுவனங்களை எளிதில் அடையாளம் காண்பதற்காக அபாயகரமான நிறுவனங்கள் என்ற பெயரில் தனி பட்டியலை உருவாக்கி கண்காணிப்பை தீவிரப்படுத்த இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தரவு பகுப்பாய்வாளர்கள் உதவியுடன் 115 போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments