அடங்க மறு அத்துமீறு...அடி விழுந்தால் அப்பீட் ஆகு..! போலீஸ் கொடுத்த பரிசு
நடிகை குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டபடி கேளம்பாக்கம் பண்ணைவீட்டை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் விரட்டி அடித்தனர்.
திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் தடை மீறி போராட்டம் நடத்தச்சென்ற பாரதீய ஜனதாவின் மகளிர் அணியை சேர்ந்த நடிகை குஷ்புவை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், கேளம்பாக்கத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் வைத்திருந்தனர்.
ரிசார்ட் கேட் அருகே திரண்ட பா.ஜ.கவினர் கோஷம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் அங்கு சினம் கொண்ட வேங்கைகளாக வீரவேசமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் கொடி பிடித்த படி வந்தனர்
விடுதலை சிறுத்தை கட்சியினர் வந்த வேகத்தில் , அங்கு நின்ற பாரதீய ஜனதா கட்சியினரை தள்ளிவிட்டு மூடப்பட்டிருந்த இரும்பு கேட்டை பிடித்து ஆட்ட தொடங்கினர். அடுத்த நொடி அங்கு வந்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் பிரம்பை சுழற்றியதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் சிதறி ஓடினர்
எந்த தெருவழியாக வந்தார்களோ, அதே தெருவழியாகவே சிறுத்தைகளை போலீசார் விரட்டிச்சென்றனர். பதுங்கிய சிலருக்கு பலத்த அடி விழுந்தது
கையில் கொடியுடன் சிக்கிய இரு தொண்டர்களுக்கு முதுகில் விழுந்த அடியால் ஏந்தி வந்த கொடியை போட்டு விட்டு அலறியபடியே அங்கிருந்து ஓடினர்
கைது செய்யப்பட்டு குஷ்பு, போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அடங்க மறுத்து, ஆவேசம் கட்டியதோடு அத்துமீறி போராட்டம் நடத்தியதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது போலீசார் தடி அடி நடத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் மட்டுமல்ல எந்த ஒரு அரசியல் போராட்டம் என்றாலும் உணர்ச்சிவசப்பட்ட அப்பாவி தொண்டர்கள் மட்டுமே போலீசாரின் கவனிப்புக்கு இலக்காகுகின்றனர்.
Comments