இந்தியாவில் கடந்த 5 வாரங்களாக கொரோனா இறப்பு குறைந்து வருகிறது - மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் தகவல்

0 1752
இந்தியாவில் கடந்த 5 வாரங்களாக கொரேனா இறப்பு குறைந்து வருகிறது - மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 90.62 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குணமடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவது நல்ல அறிகுறி என்றார். கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த 5 வாரங்களாக குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 78 சதவீதம் பேர், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருப்பதாக அவர் கூறினார். பண்டிகை காலம் காரணமாக கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா டெல்லியில் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments