பாகிஸ்தான் மதராஸா பாடசாலையில் குண்டு வெடிப்பு - 7 பேர் உயிரிழப்பு

0 1574
பாகிஸ்தான் மதராஸா பாடசாலையில் குண்டு வெடிப்பு - 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் மதராஸா பாடசாலையில் நடந்த குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள பெஷாவர் நகரில், மத வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. குண்டு வெடிப்பில் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதில், 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மதராஸாவில் பிளாஸ்டிக் பையில் ஒன்றில் சுமார் 6 கிலோ எடையுள்ள வெடி பொருட்களை வைத்துச் சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments