மலேசியாவில் பிரதமர் யாசினுக்கு ஆதரவு என ஐக்கிய மலாய் கட்சி அறிவிப்பு

0 1008

மலேசியாவில் நூலிழை பெரும்பான்மையில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் முஹியித்தீன் யாசினுக்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சி தெரிவித்துள்ளது.

பெரும்பான்மையை நிரூபிப்பதை தவிர்க்கும் நோக்கில் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்த முயன்ற பிரதமரின் திட்டத்தை  மன்னர் நிராகரித்து விட்டதால், பிரதமர் பதவி விலக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில், பிரதமருக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக கூறி வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சி இப்போது தனது ஆதரவு முஹியித்தீன் யாசினுக்கு தொடரும் என அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments