அலிபாபா நிறுவனர் ஜாக் மாவின் Ant நிறுவனம் ரூ.2.50 லட்சம் கோடி மதிப்பிலான பங்கு வர்த்தகம்

0 1531
அலிபாபா நிறுவனர் ஜாக் மாவின் Ant நிறுவனம் ரூ.2.50 லட்சம் கோடி மதிப்பிலான பங்கு வர்த்தகம்

அலிபாபா நிறுவனர் ஜாக் மாவுக்கு சொந்தமான Ant ஆல்லைன் பேமெண்ட் நிறுவனம் சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குசந்தை வர்த்தகத்தில் குதித்துள்ளது.

ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குசந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள Ant பங்குகளுக்கு பெரிய முதலீட்டாளர்களிடம் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனது 11 சதவிகித பங்குகளை மட்டுமே விற்க உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பங்குசந்தை வர்த்தகத்தை தொடர்ந்து ஜாக் மாவின் சொத்து மதிப்பு சுமார் 5 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக உயர்ந்து, சீனாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற தகுதியை அவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் பங்கு சந்தையில் அதிக பட்ச தொகையான  2 லட்சத்து 17 ஆயிரம் கோடியுடன்  சவூதி அராம்கோ, கடந்த டிசம்பரில் பங்கு வர்த்தகத்தை துவக்கியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments