நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 3832
நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி உள்ளிட்ட ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கடலோர மாவட்டங்கள்  மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.  சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments