ஆந்திராவில் விஜயதசமியை முன்னிட்டு வழிபாடு என்ற பெயரில் நடைபெற்ற அடிதடி போட்டியில் 40-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மண்டை உடைந்து காயம்
ஆந்திர மாநிலம் கர்னூலில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற அடிதடி வழிபாட்டில் 40-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மண்டை உடைந்தது.
அங்குள்ள மல்லேஸ்வரர் கோயிலில், விஜயதசமி நாளில் உற்சவ மூர்த்திகளை தங்கள் ஊருக்கு கொண்டு செல்வதற்காக, 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கையில், கம்புகளை ஏந்தி சம்பிரதாய முறைப்படி ஒருவரை ஒருவர் தாக்கி போட்டி போட்டு வெற்றி பெறுவது வழக்கம்.
ஆரம்ப காலத்தில் சம்பிரதாய முறைப்படி நடைபெற்ற இந்த நிகழ்வு காலப்போக்கில் சொந்த பகையை தீர்த்து கொள்வதற்கான வாய்ப்பாக மாறியது. இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், சொந்த பகை உள்ளிட்ட காரணங்களால் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டதால், 40-க்கும் மேற்பட்டோருக்கு மண்டை உடைந்தது.
Comments