தைவானுக்கு ரூ.17,700 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

0 1596
தைவானுக்கு ரூ.17,700 கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல்

தைவானுக்கு, சுமார் 17 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான கடலோரோ பாதுகாப்புக்கான ஹர்பூன் தளவாடங்களை விற்க ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட RGM-84L-4 Harpoon Block II ரக 400 ஏவுகணைகள் இதன்படி தைவானுக்கு வழங்கப்படும். ஏற்கனவே, கடந்த வாரம், 700 கோடி ரூபாய் மதிப்பில் தைவானுக்கு ஏவுகணை வழங்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்து கொண்டுள்ளது. தைவானை தனது பகுதி என சொந்தம் கொண்டாடி வரும் சீனா இந்த ஒப்பந்தங்களால் ஆத்திரமடைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments