துருக்கி ஆதரவு போராளிகளைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு எனத் தகவல்
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 35க்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டனர்.
இட்லிப் நகரின் புறநகர் பகுதியில் துருக்கி ஆதரவு ஆயுதக் குழுவான பைலக் அல் ஷாம் என்ற குழுவினரின் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமைக் குறிவைத்து நேற்று ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
இந்தத் தாக்குதலில் பைலக் அமைப்பைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
Comments