தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் நெல் கொள்முதல் அதிகரிப்பு- மத்திய உணவு அமைச்சகம் தகவல்

0 1242
தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் நெல் கொள்முதல் அதிகரிப்பு- மத்திய உணவு அமைச்சகம் தகவல்

தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் நெல் கொள்முதல் நடப்பு ஆண்டு 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நெல் விளையும் தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீர், சண்டீகர் ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் சம்பா பயிர் நெல் கொள்முதலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரை 144.59 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments