மருத்துவமனை செல்லும் சாலையை மறித்து ரிப்பன் வெட்டிய எம்.எல்.ஏ ..! பழைய சாலைக்கு திறப்பு விழா ?

0 8508

ரியலூரில் மக்கள் பயன்பாட்டில் இருந்த மருத்துவமனை செல்லும் சாலையின் குறுக்கே ரிப்பன் கட்டி எம்.எல்.ஏவை வைத்து திறந்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

எம்.எல்.ஏவால் பழைய சாலை என்று அழைக்கப்பட்ட சாலைக்கு நடந்த திறப்பு விழா குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு 

அரியலூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ள பெரியார் நகர் செல்லும் சாலை சில வாரங்களுக்கு முன்பு புதிதாக போடப்பட்டது. இந்த நிலையில் கட்டிடங்களைத் திறந்து வைப்பது போல இந்த சாலையை திறந்து வைக்க குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்தனர்.

21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அந்த மருத்துவமனை சாலை போட்டு இரு வாரங்கள் கடந்த நிலையில், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் அண்மையில் பெய்த மழையால் சாலையில் சில இடங்களில் கற்கள் பெயர்ந்தன. இதனால் இரு வாரங்களுக்கு முன்பாக போடப்பட்ட தார்ச் சாலை பழைய மண் சாலை போல காட்சி அளித்தது.

இந்த நிலையில் அடிக்கல் நாட்டு விழா ஒன்றிற்கு அங்கு வந்த எம்.எல்.ஏ குன்னம் ராமச்சந்திரன், தனது ஆதரவாளர்களால், அந்த சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ரிப்பனை வெட்டி சாலையை சம்பிரதாயமாக திறந்து வைத்த கையோடு பழைய சாலை தானே இது ? என்று கேட்டு அனைவரையும் சிரிக்க வைத்தார்

பின்னர் சாலையில் சிறிது தூரம் ஆதரவாளர்களுடன் நடந்து சென்ற எம்.எல்.ஏ ராமச்சந்திரன், தன்னை ஏமாற்றி அழைத்து வந்து பழைய சாலையை திறக்க வைத்துவிட்டதாக சிரித்தவாறே கூற, சிலர் ஒரு வாரம் தான் ஆச்சு என்று சமாளித்தனர்

எம்.எல்.ஏ ராமச்சத்திரன் வேடிக்கையாக பழைய சாலை என்று குறிப்பிட்டாலும் உண்மையில் அந்த சாலை புதிதாக போட்ட சாலை போல தரமாக இல்லை என்பதே அப்பகுதி வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments