மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடக்கம்... 2ந் தேதி வரை மாணவ-மாணவிகள் பதிவு செய்யலாம் என அறிவிப்பு

0 1780
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடக்கம்... 2ந் தேதி வரை மாணவ-மாணவிகள் பதிவு செய்யலாம் என அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ- மாணவிகள் வரும் 2-ஆம் தேதி வரை இணையம் மூலம் பதிவு செய்து, கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த விவரங்கள் வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் கலந்தாய்வு மூலம் நடத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments