சிறு வியாபாரிகள் 3,00,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று கடனுதவிகளை வழங்குகிறார்
சாலையோர வியாபாரிகள் 3 லட்சம் பேருக்கு கடன் உதவி வழங்கும் திட்டத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, பயனாளர்கள் உடன் கலந்துரையாட உள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உதவும், ஸ்வநிதி திட்டத்தை கடந்த ஜூன் ஒன்றாம் தேதி மத்திய அரசு தொடங்கியது.
அதன்படி, தெரு, தெருவாக சென்று வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கான பிரதமரின் கடனுதவி திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கடனுதவிகளை வழங்குவதோடு, காணொலி காட்சி வாயிலாக பயனாளர்களுடன் கலந்துரையாடவும் உள்ளார்.
இத்திட்டத்தின் அடிப்படையில் பயனாளருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரையில் கடனுதவி வழங்கப்படும். இந்த திட்டம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு பயனளிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு 7 சதவீத வருடாந்திர வட்டி மானியமும் வழங்கப்படும்.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் அபராதம் எதுவும் விதிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொபைல் செயலி மற்றும் இணையதளம் மூலமாகவும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Delhi: Prime Minister Narendra Modi interacts with SVANidhi beneficiaries from Uttar Pradesh via video conferencing; CM Yogi Aditynath is also present. pic.twitter.com/fQk3ugNVvf
— ANI (@ANI) October 27, 2020
Comments