நீரவ் மோடியின் ஜாமின் மனுவை 7வது முறையாக நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்

0 1662

வங்கி கடன் மோசடி வழக்கில், வைர வணிகர் நீரவ் மோடியின் ஜாமின் மனுவை 7வது முறையாக லண்டன் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7வது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த நீரவ் மோடியின் மனுவை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிபிஐ மற்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் சிறந்த ஒத்துழைப்பின் விளைவாக தொடர்ந்து ஜாமின் மனு நிராகரிக்கப்படுகிறது என்று சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments