நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்-இலங்கை நபர் குறித்த தகவலை கேட்டு இண்டர்போல் மூலம் புளூகார்னர் நோட்டீஸ்

0 2441

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை நபரை பிடிக்க "புளூ கார்னர் நோட்டீஸ்" இலங்கையில் உள்ள இண்டர்போல் போலீசாருக்கு அனுப்பப்படுகிறது.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு  பட விவகாரத்தில்  விஜய் சேதுபதி மகளுக்கு ஒருநபர் டுவிட்டரில் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்தார். 

ஐபி முகவரியை போலீசார் ஆய்வு செய்ததில், இலங்கையை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை பிடிக்க சென்னை சைபர் கிரைம் போலீசார் புளூ கார்னர் நோட்டீசை இலங்கையில் உள்ள இண்டர்போல் போலீசாருக்கு அனுப்ப உள்ளனர். இந்நிலையில்  மிரட்டல் விடுத்ததாக கூறி, ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவையும் நோட்டீசுடன் இணைத்து அனுப்ப சென்னை சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments