கேரளாவில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு - தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளாவில் வடகிழக்கு பருவமழை வருகிற 28-ந்தேதி தொடங்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை இம்மாதம் 15-ந்தேதியே தொடங்கி இருக்க வேண்டும் என்றும், ஆனால் தாமதமாக 28-ந்தேதி தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் வடகிழக்கு பருவமழையும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
பத்தினம்திட்டா, இடுக்கி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யுமென்றும், கோட்டயம், பத்தினம்திட்டா, இடுக்கி மாவட்டங்களில் நாளை மறுநாளும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments