காந்தி-நேரு பரம்பரைக்கு பிரதமரை மதிக்கும் வழக்கம் கிடையாது : பஞ்சாபில் மோடி உருவப்பொம்மை எரிக்கப்பட்டதற்கு நட்டா கண்டனம்

0 1411

வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாபில், பிரதமர் மோடியின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதற்கு, பாஜக தேசிய தலைவர் நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த செயல் ராகுல் காந்தியின் வழிகாட்டலின்படி நடந்துள்ளது என டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ள அவர், நேரு-காந்தி பரம்பரைக்கு பிரதமரையோ, பிரதமர் அலுவலகத்தையோ மதிக்கும் வழக்கமில்லை என்றும் சாடியுள்ளார்.

கடந்த 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதும் பிரதமரின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் காந்தி-நேரு குடும்பம் ஈடுபட்டதாக நட்டா குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments