சிறு வியாபாரிகள் 3 லட்சம் பேருக்கு கடனுதவிகள் : நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வழங்குகிறார்
சிறு வியாபாரிகள் 3 லட்சம் பேருக்கு கடன் உதவிகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார். தெரு, தெருவாக சென்று வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கான பிரதமரின் கடனுதவி திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கடனுதவிகளை வழங்க உள்ளார் என்று தகவல் தொடர்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் நவநீத் சினேகல் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்காக இந்த திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு தொடங்கி உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் நிதி உதவி வழங்குவதோடு, வியாபாரிகளோடு காணொலி மூலம் பிரதமர் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments