கொச்சி வந்தடைந்த தண்ணீரில் இறங்கும் வசதி கொண்ட விமானம் : சபர்மதி நதிமுகத்துவாரம், ஒற்றுமை சிலை பகுதி இடையே 31ம் தேதி முதல் இயக்கம்

0 1815

குஜராத்தில் சபர்மதி நதிமுகத்துவாரத்துக்கும், ஒற்றுமை சிலை எனப்படும் சர்தார் வல்லபபாய் படேல் சிலை அமைந்துள்ள பகுதிக்கும் இடையே இயக்கப்பட இருக்கும் தண்ணீரில் தரையிறங்கும் வசதி கொண்ட விமானம், மாலத்தீவிலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்துள்ளது.

மாலத்தீவை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து அந்த விமானத்தை ஸ்பைஸ் ஜெட் வாங்கியுள்ளது. அந்த விமானம், மாலியில்  இருந்து புறப்பட்டு கொச்சியிலுள்ள வெந்துருதி  கால்வாய் பகுதியில் நேற்று இறக்கப்பட்டது.

பின்னர் கொச்சியிலிருந்து புறப்பட்டு அகமதாபாத்துக்கு விமானம் செல்லவுள்ளது. 19 இருக்கைகள் கொண்ட விமானம், படேலின் பிறந்த தினமான வரும் 31ம் தேதி முதல் வர்த்தக ரீதியில் இயக்கப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments