திமுக தலைவரை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க துரைமுருகன் வலியுறுத்தல்

0 34951
திமுக தலைவரைக் கொச்சைப்படுத்தி, பெயர் போடாமல் தரக்குறைவான சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவரைக் கொச்சைப்படுத்தி, பெயர் போடாமல் தரக்குறைவான சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் ஸ்டாலினையும் எடப்பாடியையும் ஒப்பிட்டு சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலயில் அச்சடித்தவர் யார்  என்ற பெயரே போடாமல் ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் சுவரொட்டிகளை ஒட்டுவதாகவும், திமுக தலைவர்கள் பேசாததைப் பேசியதாகத் திரித்து சமூகவலைதளங்களில் பரப்புவதாகவும் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோயம்புத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அனாமதேய சுவரொட்டி  ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி திமுகவினர் புகார் கொடுத்திருப்பதையும் துரைமுருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments