அமெரிக்கா : முன்கூட்டியே நடந்த வாக்குப்பதிவில், கடந்த தேர்தலை விட இந்த ஆண்டு அதிக வாக்குகள் பதிவு என ஆய்வில் தகவல்

0 1614

மெரிக்க அதிபர் தேர்தலுக்கு 9 நாட்களே உள்ள நிலையில், முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கடந்த தேர்தலை காட்டிலும் அதிகமாக உள்ளதென ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு தேர்தல் நடப்பதற்கு 9 நாட்களுக்கு முன்பு 5 கோடியே 70 லட்சம் பேர் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே வாக்களிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அந்த வகையில் 5 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை வாக்குளை செலுத்தி உள்ளதாக புளோரிடா பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments