நீரின் மீது தரையிறங்கும் நவீன கடல் விமானம் மாலேயில் இருந்து இந்தியா வந்தது
நீரின் மீது தரையிறங்கும் "ட்வின் ஆட்டர் 300" என்ற ஸ்பைஸ் ஜெட்டின் நவீன கடல் விமானம் மாலத்தீவு தலைநகரான மாலேயில் இருந்து புறப்பட்டு கேரளாவில் தொழில்நுட்பப் பரிசோதனைக்காக பயணத்தை நிறுத்தியது.
கொச்சியில் உள்ள வெண்டுருத்தி நீர் நிலையின் மீது அந்த விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அகமதாபாத்தில் சபர்மதி நீர் நிலையில் இந்த விமானம் நீர் வழிப் போக்குவரத்துக்குப் பயன்படும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் அதிகபட்சமாக 12 பேர் வரை பயணிக்கலாம்.
Comments