ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி

0 2196
ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று களமிறங்கிய மும்பை அணியில், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களை சேர்த்தார். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பாண்டியா 21 பந்துகளில் 60 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர், பென் ஸ்டோக்ஸ் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 107 ரன்களை குவித்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த சாம்சனும் 54 ரன்களை சேர்க்க, 18.2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டி தொடரின் 5வது வெற்றியை பதிவு செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments